இயக்குநரை மிரட்டும் அரசியல் புள்ளி.. நடிகை அனுப்பிவைக்க சொல்றாராம்!
இயக்குநரை மிரட்டும் அரசியல் புள்ளி.. நடிகை அனுப்பிவைக்க சொல்றாராம்!
சென்னை: சினிமா நடிகைகள் அட்ஜெஸ்மெண்ட்க்கு ஓ.கே. சொல்வார்கள் எனத் தெரிந்து கொண்டால், சினிமா உலகில் நடிகைகளை சீரழிக்கும் பிரபலங்கள் அமைதியாக இருக்கிறார்களோ இல்லையோ, சில அரசியல்வாதிகள் அமைதியாக இருப்பதில்லை. நடிகையை எப்படியாவது தனது ஆசைக்கு இரையாக்கி விட வேண்டும் என தீர்மானம் எடுத்துவிடுவார்கள். அப்படியான சம்பவம் குறித்த பேச்சுதான் கோலிவுட் வட்டாரத்தில் காதும் காதும் வைத்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதாவது இந்த நடிகை தமிழ் சினிமாவுக்கு புது வரவு தான். நடிப்பில் நல்ல ஸ்கோர் செய்யும் நடிகையாக இருந்தாலும், இவரை ஆரம்ப காலத்தில் பலரும் வாய்ப்பு கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்து நடிகையை சீரழித்து விட்டார்கள்.
சினிமாவில் அழகாக தோன்ற வேண்டும் என்பதில் நடிகை கவனமாக இருப்பதாலோ என்னவோ, மாஜி எம்.எல்.ஏவுக்கு நடிகை மீது கொஞ்சம் ப்ரியம் ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் நடிகையைச் சந்தித்தபோதுதான் நடிகை மீது இருந்த ஆசை மேலும் அதிகரித்துள்ளது.
இப்படி இருக்கும்போது மாஜி எம்.எல்.ஏவோ நான் ஒரு வாரம் ஒரு தீவுக்கு போகிறேன் நீங்க கூட வந்து கம்பெனி கொடுக்க முடியுமா என நேரடியாகவே கேட்டுள்ளார். நடிகை அதெல்லாம் முடியாது எனக் கூறியுள்ளார். ஆனால் மாஜி அரசியல்வாதி விடுவதாக இல்லை. இப்படி இருக்கும்போது நடிகை தனக்கு அந்த தேதிகளில் படப்பிடிப்பு உள்ளது எனக் கூறியுள்ளார். இப்படிச் சொன்னால் தன்னை விட்டுவிடுவார் என நினைத்து அந்த நடிகை அப்படிச் சொல்லி உள்ளார். ஆனால் அந்த அரசியல் புள்ளியோ உடனே யார் அந்த இயக்குநர் எனவும் தயாரிப்பாளர் யார் எனவும் கேட்டு போன் போட்டுள்ளார்.
நடிகை ஷாக்: தயாரிப்பாளருக்கு போனைப் போட்டவர் நடிகையை தான் தீவுக்கு அழைத்துச் செல்லுவதாகவும், 10 நாட்களுக்கு நடிகை படப்பிடிப்பு வரமாட்டார் எனவும் கூறியுளார். நடிகையிடம் பேசிய தயாரிப்பாளரோ, அந்த அரசியல் புள்ளியுடன் போய்விட்டு வரும் படி கெஞ்சிக் கேட்டுள்ளார். இல்லை என்றால் படம் வெளியாகும்போது வேண்டும் என்றே ஏதாவது ஏழரையை இழுத்து விடுவார் எனக் கேட்டுள்ளார்.
பயந்த இயக்குநர்: இதனால் நடிகை என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போயுள்ளார். அடுத்து இயக்குநருக்கு போனைப் போட்டு அரசியல் புள்ளி, நடிகையை தன்னுடன் அழைத்துச் செல்லுவதாகவும், அனுப்பி வைக்க முடியுமா முடியாதா என்று கேட்டுள்ளார். படத்தை எடுத்து ரிலீஸ் செய்வதற்குள் வளர்ந்து வரும் கலைஞர்கள் எத்தனை பிரச்னைகளை சந்திக்க வேண்டி உள்ளது எனப் பாருங்கள் என்று பேசி வருகிறார்கள்.

