anuradha nazeer

Crime


4.3  

anuradha nazeer

Crime


என் காதலி

என் காதலி

1 min 2.6K 1 min 2.6K

ரோம்: "என் காதலி எனக்கு கொரோனாவை

தந்துட்டு போய்ட்டாள்.. அதான் அவளுடைய கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன்" என்று இளைஞர் வாக்குமூலம் தந்துள்ளார்.. இத்தனைக்கும் இவர் ஒரு ஆண் நர்ஸ்!! கொரோனாவின் தாக்கத்தில் சீரழிந்து கொண்டிருப்பதில் முக்கிய முதன்மையானது இத்தாலி.. இங்குதான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒரு போன் வந்துள்ளது.. அதில் பேசியவர். "என் பேர் அந்தோனியா, நான் ஒரு பிரைவேட் ஆஸ்பத்திரியில் நர்ஸ், நான் என் காதலியை கொன்னுட்டேன்" என்று வீட்டு அட்ரஸையும் சொல்லி போனை வைத்துவிட்டார்.


13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆஸ்பத்திரியில் வைரஸ் தாக்கி இறந்துவிட்டனர். நாங்கள் எங்கள் வேலையை சேவையாக நினைத்து செய்தோம். ஆனால் குவாரண்டினா, ஒருநாள், தன்னையும் அறியாமல் எனக்கு வைரஸை பரப்பிவிட்டதாக சொன்னாள். இது எனக்கு ஷாக்-ஆக இருந்தது.. ஆத்திரத்தையும் தந்தது.. அதனால்தான் குவாரண்டினாவின் கழுத்தை என் கையாலேயே நெரித்து கொன்றேன்.


வாக்குமூலம் கடைசி நேரத்துல உயிர் போறப்போ அவள் எதையோ சொல்ல வந்தாள்.. ஆனால் விடலயே.. அப்படியே கழுத்தை கெட்டியா பிடிச்சு நெரிச்சிட்டேன்" என்றார். இவ்வளவையும் வாக்குமூலமாக சொல்லி முடித்தார் அந்தோனியா.இதற்கு பிறகு போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தது.. அங்கேதான் ஒரு ட்விஸ்ட்.. அந்தோனி - குவாரண்டினா 2 பேருக்குமே கொரோனா தொற்று இல்லையாம்.


அதிர்ச்சி டெஸ்ட் எடுத்துகூட பார்க்காமல், வைரஸ் பரப்பியதாக காதலி சொன்னதுமே ஆத்திரத்தில் கொலை செய்துள்ளார் அந்தோனியா.. இப்போது டாக்டர் காதலியை கொன்ற நர்ஸ் காதலன் ஜெயிலில் உள்ளார்.. பெண் டாக்டரை ஆண் நர்ஸ் கொலை செய்த சம்பவம் பெரும் ரோமில் அதிர்ச்சியை தந்து வருகிறது.. ஒருவேளை இதைதான் குவாரண்டினா உயிர் போகும்போது சொல்ல வந்திருப்பார.


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Crime