Delphiya Nancy

Comedy

4  

Delphiya Nancy

Comedy

ஏட்டிக்குப் போட்டி-2

ஏட்டிக்குப் போட்டி-2

1 min
1.1K


அடுத்தவங்க நம்பகிட்ட பேசும்போதோ, அறிவுறை கூறும்போதோ நம்ப மைன்ட் வாய்ஸ் எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கலாட்டா...


அவன்: நான் எல்லாம் அந்த காலத்துல எப்புடி இருந்தேனு தெரியுமா?

இவன்: ஏன் உனக்கு தெரியாதா? என்ட கேக்குற?


அவன்: எனக்கு 25 வருச எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு .

இவன்:ஹாஹா, அப்போ அறுத பழசுன்னு சொல்லு.


அவன்: என் அனுபவம் தான் உன் வயசே.

இவன்: என்ன அப்டேட்டட் வெர்சன்னு சொன்னதுக்கு ரொம்ப நன்றி 🙏


அவன்: நம்ப பொண்டாட்டி எப்புடி இருக்கு?

இவன்: அடேய் அத்து மீறி போறடா, அவ என் பொண்டாட்டி டா, கிறுக்குப் பயலே.


அவன்: அப்பறம் பிள்ளைய எந்த பள்ளிகூடத்துல சேர்க்க போற?

இவன்: ம்ம் நொந்த பள்ளிக் கூடத்துல சேர்க்க போறேன், இப்பதான்டா புள்ளைக்கு பேரே வைக்கிறேன்.


அவன்:இப்ப இருக்க புள்ளைங்க எல்லாம் பெத்தவங்க பேச்ச எங்க கேக்குது?

இவன்: ஆமா இவர் பெத்தவங்க பேச்ச கேட்டுதான் கூட படிச்சவள இழுத்துட்டு வந்தாரு...


அவன்: தம்பி நல்லா படிச்சு பெத்தவங்க பேர காப்பாத்தனும.

இவன்: ஏன் என்ன பெத்தவங்க பேரு வெள்ளத்துலயா அடிச்சுட்டு போகுது காப்பாத்த?

அப்புடியே வெள்ளத்துல அடிச்சுட்டு போனாலும் நீச்சல் அடிச்சுதான் காப்பாத்த முடியும், படிச்சு எப்புடி காப்பாத்த முடியும்?


அவன்: உனக்கெல்லாம் அறிவு இருக்கா?

இவன்: உன்ட இருந்தா ஒரு கிலோ குடேன், கேக்குறான் பாரு கேள்வி, பெரிய ஞானி இவரு.


அவன் : என்ன டா பன்ற? எப்ப பார்த்தாலும் சும்மாவே உட்கார்ந்து இருக்க?

இவன்: ஆமா இவர் கலெக்டர் வேலை பார்த்து கலைச்சு போய் வராரு, பேசம ஓடி போயிறு.


அவன்: ஏன் இப்புடி கத்துரிங்க?

சட் அப் யுவர் மௌத்.

இவன்: எல சட்டி பான கவுத்ல.

           



Rate this content
Log in

Similar tamil story from Comedy