சந்தோஷமாக வாழ
சந்தோஷமாக வாழ


சென்னையில் செல்போன் கொள்ளை; கோவாவில் உல்லாசம் - குதிரை சிவாவின் அதிர்ச்சி ஹிஸ்டரி
சென்னையில் செல்போன்களைத் திருடியதும் அதை விற்றுவிட்டு கோவாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்... கொள்ளையன் குதிரை சிவா, என்கின்றனர் போலீஸார்.
சென்னையில் செல்போன் பறிப்பு, செயின் பறிப்பு எனத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்தன. இதுதொடர்பான புகார்களின் பேரில் போலீஸார் விசாரணை நடத்திவந்தனர். சென்னையில் கொள்ளைச் சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வுசெய்தனர். அப்போது, ஹெல்மெட் அணிந்துகொண்டு செல்போன், செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டது ஒரே நபர் என்பதை போலீஸார் உறுதிப்படுத்தினர். பின்னர், கொள்ளைச் சம்பவங்களில் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு நம்பர்களை வைத்து விசாரித்தபோது, அது திருட்டு வாகனம் எனத் தெரியவந்தது.போலீஸாரின் விசாரணையில்... செல்போன், செயின் பறிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டது வினோத் அலெக்ஸாண்டர் என்கிற குதிரை சிவா எனத் தெரியவந்தது. இதையடுத்து எழும்பூர் போலீஸார், குதிரை சிவாவைக் கைதுசெய்து செல்போன்கள் மற்றும் பைக்கை போலீஸார் பறிமுதல் செய்தனர். குதிரை சிவாவிடம் விசாரித்தபோது, அவரின் இன்னொரு பக்கம் தெரியவந்தது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய எழும்பூர் போலீஸார், ``குதிரை சிவாவின் குடும்பம் பரங்கிமலையில் உள்ளது. இவரின் திருட்டுத் தொழில் குறித்த தகவல் குடும்பத்தினருக்குத் தெரிந்ததும் இவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு விரட்டியுள்ளனர். அதனால் நண்பர்களுடன் அவர் தங்கியி
ருந்துள்ளார். எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் பின்பகுதியில்தான் பெரும்பாலும் குதிரை சிவா தங்கியிந்துள்ளார்.திருட்டு பைக்கில்தான் செயின், செல்போன்களைப் பறிப்பார். பின்னர், அந்த பைக்கை அநாதையாக விட்டுவிட்டு சென்னையை விட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். அவர் அடிக்கடி கோவாவுக்கு சென்றுள்ளார். அங்கு விடுதியில் தங்கி சந்தோஷமாக இருந்துள்ளார். பணம் செலவானதும் மீண்டும் சென்னைக்கு வருவார். அதன்பிறகு செல்போன், செயின்களைப் பறித்துவிட்டு வெளி மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார். இதுதான் குதிரை சிவாவின் ஃலைப் ஸ்டைலாக இருந்துள்ளது.
கொரோனா ஊரடங்கையொட்டி, சென்னை புழல் சிறையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டிருந்த குதிரை சிவா வெளியில் வந்துள்ளார். அப்போது, அவரின் கையில் பணம் இல்லை. மேலும், தங்குவதற்கும் இடம் இல்லை. அதனால் சென்னை கடற்கரை, பிளாட்பாரங்களில் தங்கியிருந்துள்ளார். அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்பவர்களைப் பின்தொடர்ந்து சென்று செல்போன்கள், செயின்களைப் பறித்துள்ளார்.திருடிய செல்போன்களை விற்க குதிரை சிவா பைக்கில் சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து சென்று கைதுசெய்தோம். கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடும் குதிரை சிவா, தனி ஒருவனாகவே செயல்படுவார். ஏனெனில், கூட்டாளிகளுடன் கொள்ளையடித்தால் சிக்கிக்கொள்வோம் என்ற முன்எச்சரிக்கையுடனும் அவர் செயல்பட்டுவந்துள்ளார். சென்னையில் திருடிய செல்போன்களை விற்றுவிட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் சந்தோஷமாக வாழ திட்டமிட்டுள்ளார். ஆனால், அதற்குள் எங்களிடம் சிக்கிக்கொண்டார்" என்றனர்.