சில்லறையின் மதிப்பு
சில்லறையின் மதிப்பு


மாத கடைசியில்
பலருக்கு தெரிந்த
சில்லறையின் மதிப்பு.,
மாத தொடக்கத்தினிலே
பேருந்து நடத்துனர் அறிந்திருக்கிறார்..
அன்று
பத்து ரூபாயைச்
சில்லறை என்று கருதி
உயர்தர உணவகத்தில்
உணவு பறிமாறியவனுக்கு
அன்பளிப்பாக கொடுத்த கரங்கள்.,
இன்று
அம்மா உணவகத்தில்
ஒரு ரூபாயைப் பணமாக
எண்ணி கொடுக்கிறது,
பசி அடங்காது
வாங்கிய மற்றொரு இட்லிக்கு..
காலையில் கடைக்காரர் கொடுத்த
சில்லறை
சரியாக இருக்கிறத
என்று சரிபார்க்காத வாடிக்கையாளர்
ஒரு புறம் இருக்க.,
மாலையில் வாடிக்கையாளர் கொடுத்த
சில்லறை சரியாக இருக்கிறதா
என்று புதிதாக வாங்கி வைத்த
பணம் எண்ணும் இயந்திரத்தில்
போட்டு சரி பார்க்கிறார் கடைக்காரர்.
அன்று பிச்சைக்காரன்
கேட்ட போது
சில்லறை இல்லை என்று கூறி
சட்டைப் பையைத் தேய்த்த கூட்டம்.,
இன்று சில்லறை
சட்டைப் பையை நிறைத்து இருந்தும்
பிச்சைக்காரனுக்கு தர மறுக்கிறது
சில்லறையை…