ஆசை பேனா
ஆசை பேனா
அவள் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள், அவளுக்கு பேனாவில் எழுதுவது என்றால் ரொம்ப பிடிக்கும், அவளுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக அவளால் விலை குறைந்த பேனாக்களை மட்டுமே பயன்படுத்த முடிந்தது, ஆனால் அவளுடன் படிக்கும் சில தோழிகள் அந்த விலை அதிகமான பேனா வைத்துக் கொண்டிருந்தார்கள், இதை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கும் அதே போல் ஒரு பேனா வாங்க வேண்டும் அதை பயன்படுத்த வேண்டும் என்று ஆசையாக இருக்கும், ஆனால் அது அவள் எண்ணத்தில் மட்டுமே இருந்தது, இந்த பேனா வாங்க வேண்டும் என்ற ஆசை தோன்றும் போதெல்லாம் அவளை பெற்றவர்கள் அவளுக்காக படும் துன்பம் மட்டுமே கண் முன் வந்து நிற்கும், அதனால் தன் ஆசையை அடக்கிக் கொண்டு அமைதியாகி விடுவாள்.
அந்த சிறு வயதிலே அவள் பெற்றவர்களின் கஷ்டங்களை உணர்ந்து இருந்தாள், இதனால் எப்போதும் மற்ற பிள்ளைகள் அடம் பிடித்து கேட்பதை போல், இவள் எதையும் கேட்டதில்லை, அதனாலேயே அவளுக்கு தேவையானதை அவளை பெற்றவர்கள் அவளுக்கு வாங்கி கொடுத்தார்கள், இப்படியாக நாட்கள் சென்றுக் கொண்டிருந்தது, ஆனால் அவளுக்கு அந்த பேனாவின் மீது இருந்த ஆசை மட்டும் குறைந்தபாடில்லை, பிறந்த நாளான அன்று அவளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அது நடந்தது, என்னவென்றால் தன் வீட்டை சுற்றி இருக்கும் வீடுகளுக்கெல்லாம் சென்று தன் பிறந்தநாள் என்று சாக்லெட் கொடுக்க சென்றால், அப்படியாக ஒரு வீட்டில் அவளுக்கு பரிசாக ஒரு பேனாவை அளித்தார்கள் அதுவும் அவள் ரொம்ப நாளாக ஆசைப்பட்ட பேனா அது, அவளுடைய கண்களிலும் மனதிலும் தோன்றிய ஆனந்த்துக்கு அளவே இல்லை, இதை அவளால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை, கடைசியில் அவள் ஆசைப்பட்ட மாதிரியே அந்த பேனா அவளுக்காக அவளிடமே வந்து சேர்ந்து விட்டது, அதுவும் அவள் எதிர்பார்க்காதவர்களுடமிருந்து....
