கல்யாண பத்திரிக்கை....
கல்யாண பத்திரிக்கை....
மது இங்கே வாயேன் என்ற அழைப்புடன் உள்ளே நுழைந்தார்கள் அவளது பெற்றோர். என்னமா என்ற கேள்வியுடன் எட்டி பார்த்தவளுக்கு, அவர்களின் கைகளில் ஒரு பார்சல் இருந்தது. இந்தம்மா இதை எடுத்து கொண்டு போய் சாமி படத்திற்கு கீழே வை மதுவிடம் தந்தனர் அவளது பெற்றோர். அவளோ எதுவும் கேட்காமல் வாங்கி கொண்டு உள்ளே சென்றாள். அந்த பார்சலை சாமி படத்திற்கு கீழே வைத்து விட்டு திரும்பும் வேளையில், அந்த பார்சலை பிரித்து, அதிலிருந்து ஒரு பத்திரிகையை வெளியே எடுத்து வைமா என்றார் அவளின் அம்மா. என்ன பத்திரிக்கை என்று பிரித்துப் பார்க்கையிலே தெரிந்தது, அது அவளோட கல்யாண பத்திரிகை என்று. ஒரு நிமிடம் என்னவென்று அவளுக்கு புரியவில்லை. அம்மா என்னமா இது, இதுல என் பேர் போட்டிருக்கு. அதை அங்க வைத்து விட்டு இங்க வா என்று கூப்பிட்டு அவர்கள் அருகில் அமர வைத்தனர். அவள் தலையை கோதியவாறே, திடிரென இப்படி சொல்றோம்னு எங்கள தப்பா நினைக்காதம்மா. உனக்கு ரொம்ப நாளா வரன் பார்த்துட்டு இருக்கோம்னு உனக்கே தெரியும், எதுவும் சரிப்பட்டு வரல. நாங்க உன் மாமா வீட்டுக்கு போயிருந்தப்ப தான் தெரிந்தது, மாமா பையன் சந்திரனுக்கு பொண்ணு பாத்துட்டு இருக்கோம்னு பேச்சு வாக்குல சென்னாரு. அதுவும் அடுத்த மாசத்துக்குள்ள அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொன்னாங்க, உங்களுக்கு சம்மதம்னா சொல்லுங்கனு சொன்னாரு, நானும் உன் அம்மாவும் யோசிச்சு பாத்தோம், எங்களுக்கும் சந்திரன புடிச்சு இருந்தது, அதான் சரி சொல்லிடோம் உன்ன கூட கேக்காம. ஆனா நாங்க சரி சொன்னவுடனே, தேதிய குறிச்சு பத்திரிக்கை அடிச்சு கைல குடுத்து அனுப்பிட்டாங்க. பொண்ண பையன் பாக்க வேணாவனு கேட்டதுக்கு, நா அவள கல்யாணத்துல பார்த்துக்கிறேனு சொல்லிடாம்மா,சந்திரன். எங்களுக்கு ஆச்சரியமா போச்சு. ஆனா உங்க பொண்ணுக்கு என் பையன் படத்த காட்டுங்கனு சந்திரன் போட்டா குடுத்து விட்டாங்க. இந்த பாரும்மா. மது கைகளில் வாங்கியவுடன் அவளது பெற்றோரை பார்த்தாள். என்னமா எங்க மேல கோவமா உன்ன கேட்கமா சரி சொல்லிடோம்னு. அதெல்லாம் இல்லபா, இப்படி திடீரென சொன்ன, எனக்கு என்ன சொல்றதுனே தெரில. நீ சந்திரன பாத்த உனக்கு கண்டிப்பா புடிக்கும் என்று அவளிடம் போட்டாவை தந்தனர். இப்போ மதுவின் ஒரு கையில் சந்திரனுடைய போட்டோ, இன்னொரு கையில் அவளது கல்யாண பத்திரிகை. அவளது மனநிலையை அவளால் விவரிக்க முடியவில்லை. ஒரு பக்கம் துக்கம் ஒரு பக்கம் எதிர்பார்ப்பு என்று அவள் கண்களில் உணர்ச்சிகள் ததும்பி கொண்டிருந்தது. இன்று என் கைகளில் இருக்கும் பத்திரிக்கை, எத்தனை சோதனைகளுக்கு பிறகு என்னிடம் வந்திருக்கிறது என்று அவள் மனம் மகிழ்ந்திருந்தது. இதுபோன்ற எதிர்பாரா மகிழ்ச்சி மதுவிற்கு கல்யாணத்திற்கு பிறகும் சந்திரனால் நீடிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.....
நன்றி 🙏.....
