STORYMIRROR

Megath Thenral

Romance Fantasy

4  

Megath Thenral

Romance Fantasy

சந்திப்பு

சந்திப்பு

1 min
149

இளன் பதைப்பதைப்புடனும், பெரும் ஆர்வத்துடனும் அங்கும் இங்குமாக நடந்துக் கொண்டிருந்தான் வாசலை பார்த்துக் கொண்டே...

அப்போது அவன் கைபேசி சினுங்கியது, திரையில் பெயரை கண்டதும், ஆவலுடன் கண்கள் விரிய புன்னகை மலர்ந்தது அவனது முகத்தில், கைப் பேசியை காதில் வைத்தான்.

அதன் வழியே ஒரு இனிமையான குரல் கேட்டது. ஆம், நீங்கள் நினைத்தது போல் அது ஒரு பெண்ணின் குரல் தான். அந்த குரல் இன்னும் ஐந்து நிமிடத்தில் அவன் இருக்கும் இடத்திற்கு வந்து விடுவதாக கூறியது.

அதைக் கேட்டதும் இளனின் மனம் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தது. அந்த ஐந்து நிமிடங்களும் அவனுக்கு கடினமான நிமிடங்களாக கடந்து கொண்டிருந்தது. அப்போது வாயிலில் கதைவை திறக்கும் சத்தம் மெல்லியதாக கேட்டது. 

அவன் மனது படபடக்க வாயிலை திரும்பிப் பார்த்தான் வேகமாக, அங்கிருந்து ஒரு உருவம் அவனை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தது. அது இவ்வளவு நேரமாக அவன் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த தமிழ் தான். 

அவள் மனதை கவரும் அழகுடன் இருந்தால், பார்த்ததும் அவனுக்கு அவளை பிடித்துவிட்டது. அவனின் மனதுக்குள் அப்படியே நிலைத்து நின்றுவிட்டாள்.

எப்போதும் குரலை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், நேரில் பார்க்கும் போது அப்படியே உறைந்து போய் அமர்ந்திருந்தார்கள்.

திடிரென தமிழின் கைப்பேசி ஒலித்தது. அப்போதுதான் அந்த மௌனம் கலைந்து சுயநினைவிற்கு வந்தனர் இருவரும். ஒரு தவறான அழைப்பால் பேசத் தொடங்கியவர்கள் பின்பு நெருங்கிய நண்பர்களாயிருந்தனர், இப்போது தான் நேரில் சந்தித்துக் கொள்கின்றனர். இருவரின் மனமும் இப்போது ஒரே மாதிரியாக யோசித்துக் கொண்டிருந்தது, நம் வாழ்க்கையை நாம் இருவரும் பகிர்ந்துக் கொள்ளலாமா என்ற கேள்வியுடன். 

இந்த சந்திப்பு இவர்களுக்கு இன்னொரு புதிய உறவின் ஆரம்பமாக அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 



Rate this content
Log in

Similar tamil story from Romance