வண்ணக் குப்பியா.?
வண்ணக் குப்பியா.?
உன் விழிகள் என்ன வண்ணக் குப்பியா.?
இமைகள் முழுதும் தூரிகை கொண்டு
நீ என்னை வரைந்து சென்றாயே !
வரை யும் போது பல வண்ணங்கள் தெளித்து வரைவாயே நீ என்னைத் தொட்டு வரையும்
போதெல்லாம் நெஞ்சில் ஓர் இன்பக்
கிளு கிளுப்பு !உனக்குத் தெரியுமா ???
பெண்ணே உன் ஓரப் பார்வை என் மீது படும்போதெல்லாம். என் மனத்துள்ளே ஒரு பரி தவிப்பு
பெண்ணே உன் விழிகளை
என் மேல் இருந்து எடுத்து விடு
இல்லையெனில் உன்னை கொடுத்து விடு
இல்லை என் வாழ்க்கையை முடித்து விடு
கொடுக்கவும் முடியாமல் விடவும் முடியாமல்
என் கதையை முடிக்க முடியாமல்
என்னை திண்டாட விடாதே
அலுவலகத்தில் கூட வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை உண்டு
ஆனால் உன் நினைவுகளில் இருந்து. ஒரு நொடியும் விடுதலை இல்லையே? அது ஏன் பெண்ணே????
இந்தியாவிற்கு கூட நள்ளிரவில் சுதந்திரம் வந்துவிட்டதே
எனக்கு எப்போதும்மா விடுதலை தர போகிறாய்????