Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Shakthi Shri K B

Abstract Drama Inspirational

4  

Shakthi Shri K B

Abstract Drama Inspirational

வாழ்வின் தேடல்

வாழ்வின் தேடல்

1 min
359


இத்தனை வருடங்கள் வராத ஆசை என் அறுவது வயதில் உதித்தது,

வாழ்க்கை இப்படியே முடிந்துவிடுமோ என்ற எண்ணம் தோன்றியபின்;

இந்த வயதில் தனியாக ஒரு பயணம் மேற்கொள்ள மனம் விரும்பியது.


குடும்ப சூழல் பேர குழந்தைகள் என அனைத்து பொறுப்புகள் ஒரு புறம்;

என்னது இதுதெல்லாம் ஒரு லட்சியமா என கேலி செய்த உறவுகள் ஒரு புறம்,

யார் என்ன கூறினாலும் எடுத்த முடிவில் பின்வாங்க என் மனம் தயாராகவில்லை.


இன்றே சென்றேன் இரயில் நிலையத்திற்கு பயண சீட்டை பெற்றேன் நான்,

வந்தேன் வீட்டிற்கு மனைவி மக்களிடம் விடைபெற்றேன் என் வாழ்வின் முதல் தனிமை பயணத்திற்கு,

நாட்கள் பல ஓடின பல ஊர்களை சுற்றி பார்த்தேன் என் வாழ்நாளின் சிறந்த நாட்கள் அவை.


எத்தனை ஊர்கள் சுற்றியும் என் மனம் ஏதோ ஒரு தேடலை நோக்கியே இருந்தது,

வாழ்க்கையின் தேடல் முடிவு பெறுமோ என்ற கேள்வியுடன் பயணத்தை தொடர்த்தேன்,

பின்பு ஒரு நாள் என் அறிவுக்கு எட்டியது தேடல் என்பது வாழ்வதுதான் இதற்கு வேறு விடையில்லை.



Rate this content
Log in

Similar tamil poem from Abstract