ஊரடங்கு
ஊரடங்கு


கண்ணறியா கிருமி இது,
நம் கால்களை கட்டிப் போட்டது.
உ லகமே வீடாய் உணரப்பட்ட வாழ்க்கை,
வீடே உலகமென சுருங்கியது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல், அனைத்து நாட்களும் ஞாயிறுகளாய் விடிந்தது.
அலாரம் அடிக்கவில்லை, அலங்காரத்துக்கு தேவையில்லை.
புடைவையும் செருப்பும் விடுதலை பெற்றது.
நாம் அணியும் உடையே நாகரிகம் ஆனது.
பலப் புது உணவுகளும், பலப் பழைய விளையாட்டுகளும் புத்துயிர் பெற்றது.
நாவில் புது சுவை மொட்டுக்கள் பூத்தன.
தாய்மைக்கும் தாரத்துக்கும் ஆனா மகத்துவம் அறிந்தது ஆண்மை.
அடைக்கப்பட்டான் மனிதன்.விடுதலை பெற்றது இயற்கை.
வீடேச் சுற்றுலாத் தளம் ஆனது.குடும்பமே கோவில் ஆனது.
இன்று உணவிற்கு என்ன சமைப்பது என்ற குழப்பத்தில் ஒரு வகை.
இன்று உணவிற்கு என்னதான் செய்வது என்ற வறுமையில் மறு வகை .
கட்டத்தில் அடைபட்ட வாழ்க்கை, தினமும் மாலையில் பட்டமென பறந்தது.
வெண்மையும், காக்கியும், நீலமும், கடவுளின் நிறம் ஆனது.
பிறந்தது முதல் கேளாத மாற்றம், கனவிலும் காணாத தோற்றம், கண்டான் மனிதன்.
காரணம் கொரோனா..
ஊரடங்கில் மூடப்பட்டது கதவுகள் மட்டுமே.ஆனால் திறக்கப்பட்டது பல கோடி மனங்கள்.
விரட்டி பிடிக்கும் உன்னை, துரத்தி அடிக்கும் காலம் வரும், மாற்றம் ஒன்றே நிலையானது..
ரேவதி சசிகுமார்.