STORYMIRROR

Siva Kamal

Abstract

4  

Siva Kamal

Abstract

உதிரிகள்

உதிரிகள்

1 min
23.4K

எக்ஸ்போர்ட் கம்பெனியின்

பீஸ் ரேட் வேலைக்கு

புறப்படும் பெண்

சிறிதும் மறுப்பேதுமின்றி

செவன் டு செவன் ஷிப்ட்டில்

இயந்திரமாய் உருமாறுகிறாள்.

காலத்தின் பனிரெண்டு முட்களுக்கு

ஒப்படைத்த வாழ்க்கைதான்

அவள் பசி தீர்க்கிறது.

அம்மாவுக்கு மருந்து வாங்குகிறது .

தம்பியைப் படிக்க வைக்கிறது .

சீட்டு போட்டுத் தங்கம் வாங்குகிறது .

சிவகார்த்திகேயன் படம் பார்க்கிறது .

ஒரு ஞாயிறில் கறி எடுக்கிறது .

மார் நோக்கும் மேலாளன்

கண் நோக்கிப் பேசுகிறது .

எல்லாத் துரோகங்களையும்

விழுங்கிச் சிரிக்கிறது .

கடக்கும் அழகிகளை எல்லாம் இந்நகரம் காதலிக்கும்

அவள் ஏழையாய் இல்லாதவரை..

அடித்துச் சொல்கிறது .

எப்போதேனும் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கொள்கிறது .

பெண் பார்க்க வருபவர்களிடம்

அனிச்சையாய்ப் புன்னகைக்கிறது.

உடம்பு வலிக்கு அதுவாக மாத்திரைகள்

போட்டுக் கொள்கிறது.

பார்த்துக் கொண்டிருக்கும்போதே

அந்த எழிலிருந்து ஏழு நிலக்கன்னிக்கு

வயதும் முப்பத்தைந்து ஆகி விடுகிறது.

இனி நீங்கள் அந்தப் பெண்ணை

உறவினர் வீட்டில் வேலைக்காரியாய்ப் பார்க்கலாம்.

ஒரு கிழவனுக்கு இரண்டாம் தாரமாய்க் கேட்கலாம்

இது கெட்ட கேட்டுக்கு

எனக் கதைகளும் பேசலாம்.


இதில் என்ன இருக்கிறது...

அவள் உங்கள் பெண் இல்லைதானே?


Rate this content
Log in

Similar tamil poem from Abstract