உறவுகள்
உறவுகள்


எழுதப்பட்ட கடிதம்
போய் சேர
நாளாகும் என்றே
கண்டுபிடித்த அறிவியல்
கருவிகளின் தொந்தரவால்
மனிதனுக்கு மனிதன்
முகம் பார்த்து
பேசும் பழக்கம் குறைந்து
போனதேனோ!
தொலைபேசி செல்லிடபேசி
வருகையினால்
வயதான பெற்றோர்
தங்களுடைய வாரிசுகளின்
மனம் தொட்டு
பேசத்தான் இயலுமா?
நாற்பது வயதில்
நாலு மா இடம் இருக்கையில்
நூறு தொலைபேசிகள்
உரையாடல்களில் அன்பு உரசல்கள்!
எண்பது வயதில்
நாலு வேட்டி மட்டும் உரிமையாக
இருக்கையில் தொலைபேசி
செல்லிடபேசி ஒட்டடை படிந்து
இருப்பதன் மர்மம் ஏனோ!