STORYMIRROR

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

4  

Selva KP நாஞ்சில் செல்வா

Abstract

உறவு

உறவு

1 min
367

பேசியவார்த்தையில் ஏதோ ஒன்று தொட்டிருக்கும்....


கழித்த பொழுதுகளில் ஏதோ ஒன்று தடுக்கச்சொல்லியிருக்கும்....


கொடுத்த வாக்குறுதியில் ஏதோ ஒன்று வந்து போயிருக்கும்...


தந்த நம்பிக்கையில் ஏதோ ஒன்று தடுக்கச்சொல்லியிருக்கும்...


உணர்ந்த அன்பில் ஏதோ ஒன்று மனதில் ஓடியிருக்கும்...


கண்ட கனவுளில் ஏதோ ஒன்று நிழலாடியிருக்கும்...


பகிர்ந்த அன்பில் ஏதோ ஒன்று பதிந்துபோயிருக்கும்..

 


போகாதே என சொல்லுவாய் என நினைத்தேன்........


மவுனத்தை பூசிவிட்டு நின்றுவிட்டாய்...


இருந்துவிட்டு போகட்டும்...


நீ பேச முற்படுகையில் வெகுதூரம் சென்றிருப்பேன்...


 காதில் எதுவும் வந்தடையா தூரத்தைக் கடந்திருப்பேன்......


பதில் வரா அத்தருணத்தில் ..


 நினைவு முழுதும் என்னை நிறுத்திக்கொள்.........


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract