Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

உழைப்பாளிகள்

உழைப்பாளிகள்

1 min
246


இந்த உலகிற்காகவும் நாட்டிற்காகவும் வியர்வையினைச் சிந்தி உழைப்பவர்கள் உழைப்பாளிகள்!

அனைத்துத் துறைகளிலும் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டிருப்பவர்கள் உழைப்பாளிகள்!

நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திடத் தனது உழைப்பினை மூலதனமாகவும் காணிக்கையாகவும் கொண்டும் உழைப்பவர்கள் உழைப்பாளிகள்!

விலை உயர்ந்த வகைத் துணிகளை உற்பத்தி செய்தாலும் எளிய வகைத் துணிகளை மட்டுமே அணிந்து பணி புரிபவர்கள் உழைப்பாளிகள்!

விவசாயத்தில் தொடர்ந்து வருமானம் இல்லை என்றாலும் உலகில் உள்ள மக்களின் உணவுத் தேவையினைப் பூர்த்தி செய்ய விவசாய நிலத்தில் தொடர்ந்து உழைப்பவர்கள் உழைப்பாளிகள்!

உழைப்பாளிகளின் உழைப்பையும் பொருளாதார நிலையினைக் கண்டு கருமையான மேகத்தினைக் கூட மழையாகக் கண்ணீரினைச் சிந்த வைப்பவர்கள் உழைப்பாளிகள்!

இரவுப் பொழுதினிலே உறங்காத கண்களுடன் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பவர்கள் உழைப்பாளிகள்!

உண்மை, உழைப்பு, உயர்வு மற்றும் ஊக்கத்துடன் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பவர்கள் உழைப்பாளிகள்!

இந்த உலகில் உள்ள உலக மக்களின் தேவைகளை அனைத்துத் தருணங்களிலும் பூர்த்தி செய்பவர்கள் உழைப்பாளிகள்!

உழைப்பே உழைப்பாளிகளின் செல்வம் என்கின்ற எண்ணம் கொண்டு தொடர்ந்து உழைப்பவர்கள் உழைப்பாளிகள்!

உழைப்பில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கின்ற பாகுபாடின்றித் தொடர்ந்து பணியாற்றுபவர்கள் உழைப்பாளிகள்!

உயர்ந்த எண்ணம் என்றும் முன்னேற்றத்தினைத் தரும் என்கின்ற எண்ணம் கொண்டு தொடர்ந்து உழைத்துக் கொண்டிருப்பவர்கள் உழைப்பாளிகள்!

உழைப்பே உயர்வுக்கு வழி வகுக்கும் என்று அடுத்த தலைமுறைக்குக் கற்றுக் கொடுப்பவர்கள் உழைப்பாளிகள்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics