உலக இயல்பு
உலக இயல்பு
புத்தகங்கள் வாசிக்கக் கிடைக்கும்
தனிமைப்பொழுதுகள்
சொர்க்கவாசல் அமிர்தம்!
தோட்டத்து இனிமைச் செடிகளுடன்
குளிராத தனிமைப்பொழுதுகள்
தேறலுடன் கலந்த கன்னல்சாறு!
பணத்தைத் தேடி ஓடிய
கடிகார முட்களின் ஓட்டத்தில்
அன்பை விழுங்கிய சுயநலம்!!
காலச்சக்கரம் விரைவாக
ஓடிய தனிமையின் பிரதிபலிப்பு
செல்ஃபோன் முட்களின் வருடலுணர்வு!