தடைக்கல்
தடைக்கல்
ஏழு சமுதாய பாவங்கள்
என நீங்கள் குறிப்பிட்ட
இடங்களை கடைபிடிக்க
முயற்சித்தும் பல இடங்களில்
சடுகுடுவென கோட்டைத்
தொடாமலே தோல்விமுகம்
காண்கிறேனே!
உங்களால் மட்டும்
பிறருக்காக வாழும்
மரங்களைப்போன்ற
மனம் ஏன் படைத்தான்
ஆண்டவன்!
நீங்கள் எழுதிச் சென்ற
பாதையிலே ஏடெடுத்து
படித்துவிட்டு இளைஞர்களை
உருவாக்கும் பணியினில்
இருந்தாலும் சாதி மதம்
மட்டும் தடைக்கல்லாய்
மாறி நிற்க
பிரச்னைகளுக்கு தீர்வு
வெள்ளைப் புறாக்களே
என்பதை உணர்ந்த
எங்கள் தேசப் பிதாவே!
பட்டையிலும் நாமத்திலும்
பிறையிலும் சிலுவையிலும்
மட்டுமல்ல மனித மனங்கள்
என்பதை உலகிற்கு உணர்த்திய அண்ணலே!
உண்ணாவிரதத்தால்
ஒருமைப்படுத்திய இந்தியாவை
கரோனா பிடியாதிருக்க
இன்னொருமுறைதான் வருவீரோ!