டிஜிட்டல் யுகத்தில் காதல் -- கவிதை
டிஜிட்டல் யுகத்தில் காதல் -- கவிதை
மைல்கல் தொலைவிலிருக்கும் என்னவனுக்காக ....
முகம் கூட அறியாமல்,
முகநூலில் பார்த்தேன்,
இன்று என் முகவரியாய் மாறினாய்....
மின்னணு பணவர்த்தனையில்,
என் மனம் அனுப்பிவைத்திருக்குறேன்!!!
அன்பாய் இருந்தால் அக்ஸேப்ட் கொடு!
இல்லையென்றால் அளித்துவிடு....
கண்கள் காண காத்திருக்கும் இந்த காதலுக்கு,
கடிதமாக குறுஞ்செய்தி ஒன்று கடத்துவாயா?
இன்ஸ்டன்ட்டாக பதில் இல்லையென்றாலும் ,
இன்ஸ்டாவில் கூறு! இன்றே இணைகிறேன்!
காமம் தாண்டி காதல் இருந்த காலமாறி,
கண்டம் தாண்டி நாம் காதல் இருக்கிறது.....
தொடும்தூரத்தில் நீ இல்லை என்றாலும்,
தொடுதிரையில் என்றும் நீ தான்....
நாம் இருவரும் தொலைவில் இருப்பது,
அந்த தொலைபேசி துணைக்கொண்டு தான்.....
தொலைவில் இருந்தும் இணைபிரியாத அன்பை எண்ணி,
அந்த இணையமே தொலைந்தது....
இதயம் இணையும் வேலையில்....
இணையத்தளம் முடங்கியது ஏனோ?
நன்றி,
ஸ்வேதா

