STORYMIRROR

Narayanan Neelamegam

Abstract

4  

Narayanan Neelamegam

Abstract

திறவுகோல்

திறவுகோல்

1 min
22.9K

இருட்டறையில் துவங்கி

கல்லறையில் முடியும் 

இந்த வாழ்க்கை .....................!!!


சிலர் கதவுகள்  

இருட்டறையில் கல்லறையாய் 


சிலர் கதவுகள் 

பாதியில் கல்லறையாய்  


சிலர் கதவுகள்

நரைத்தபின் கல்லறையாய்


இதற்கிடையில் 

இடையூறுகள் 

கலந்த வாழ்க்கை ....................!!!


இன்னலை திறக்க 

இனிதாய் தீர்வு 

கவர்ச்சியான வாழ்க்கை .........!!!  


மூடிய கண்கள் 

கனவு காண்பது 


உறங்காத விழிகள் 

தேடி அலைவது  


பகலும் கதிரவனும் 

சாதிக்க நினைப்பது    


இரவும் நிலவும் 

காதல் செய்வது  


மேகமும் மழையும் 

கண்ணீர் வடிப்பது   


மலரில் வண்டு

மகரந்தம் சேர்ப்பது  


இயங்கும் இதயம் 

சொல்ல துடிப்பது  


ஆணும் பெண்ணும் 

பரிமாற துடிப்பது  


திறவுகோலுக்கா......!!   

பல

பரிமாணங்கள் 

பூட்டி வைத்த காரணம்

வேதங்களும் சொல்ல வில்லை 

புராணங்களும் மறந்து விட்டன 


உன்னுடைய திறவுகோல் யாரிடமோ ...?

என்னுடைய திறவுகோல் யாரிடமமோ ....?

யாருடைய திறவுகோல் யாரிடமோ .......!!!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract