தாய்
தாய்


அன்பின் உறைவிடமாய்
ஆலயத்தின் ஒளிவிளக்காய்
இன்முகம் காட்டி எனை
ஈன்றபொழுதில் பட்ட துயரங்கள் மறைத்து
உயர்வாய் நான் பட்டங்கள்
ஊக்கமாய் பெற்றபோதினில்
எழுதுகோலைக் கையில் தந்து
ஏற்றம் தர வைத்து
ஐயங்கள் யாவையும் தீர்த்து
ஒருமைப்பாடு காண குடும்பத்தில்
ஓடாய்த் தேய்ந்து
ஔஷதத்தில் உயிர் வாழ்ந்து
அஃதே வாழ்க்கை என
வாழ்ந்துகொண்டிருக்கும்
அன்னையே! நீவிர் பல்லாண்டு வாழ்க!