ரகசியம் அறிவாயோ?
ரகசியம் அறிவாயோ?


தெளிவில்லாத தேடலால் தோற்பதை நீ அறிவாயோ?
பணமிருந்தும் பசிக்கு புசிக்காமல் கடக்கும் பயணத்தின் பயன் அறிவாயோ?
ஆறடி உயர்ந்த உன்னை ஆறு அங்குல திரை ஆட்கொண்டதை நீ அறிவாயோ?
வயோதிகத்தினில் வசமாய் வாழ
நிரந்தரமான நிகழ் காலம் தொலைப்பதை நீ அறிவாயோ?
கரைகின்ற காலம்தனில் நீ கரை காண்பது எப்போது?
வாழ்வின் ரகசியம் நீ அறிவதெப்போது?