பயம்
பயம்


நீ எங்கு சென்றாலும் உன் பின்னாலேயே செல்கின்றது மனம்
நீ சிறு தூரம் சென்றாலும் உன் பின்னாலே சிறகடிக்கிறது மனம்
நீ அருகில் இருக்கும் போது உதடுகள் ஒட்டிக் கொள்கின்றன
உதடுகள் பிரிய மறுக்கின்றன
பேச நினைத்த வார்த்தைகளும்
பேச முடியாமல் திக்கு முக்காடி கின்றன
உன் மூச்சுக் காற்று படும் இடங்களில் ஓரமாய் ஒதுங்கி நிற்க விரும்புகின்றேன்
கண்களை மூடினால் உறக்கம் கூட வர மறுக்கின்றது
உன் பிம்பம் கண்களில் மறைந்து விடுமோ என்று பயம்.