Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

நிலவின் தோழி கனி

Abstract Classics Inspirational

3  

நிலவின் தோழி கனி

Abstract Classics Inspirational

புத்தக காதலியே

புத்தக காதலியே

1 min
182


புத்தக காதலியே....

என்னை உனக்கு

பிடித்தது ஏனோ??

நான் என்ன

அவ்வளவு எழில்

கொஞ்சும் பேரழகா??

என் நிறம் கூட கறுப்பு

வெள்ளை தானே!!!

உன் இரு கைகளால்

எனை அணைத்து

என்னழகை நயணம்

இமைக்காமல்

காண்பது ஏனோ??

நான் உந்தன் அருகினில்

இருந்தால் நீ மற்ற 

நினைவுகளை இழந்து

என்னில் மதி மயங்கி

போவது ஏனோ???

நான் உன்னோடு 

இருக்கும் பொழுதினில்

நீ பசியாற மறப்பது ஏனோ??

அனைத்திற்கும் மேலாக

என்னை உன் காதலனாக

ஏற்றுக் கொண்டதன் 

காரணம் தான் என்ன??

என்னை உயிராக நேசிக்கும்

என் புத்தக காதலியே!!!!!


- புத்தகம்



Rate this content
Log in

Similar tamil poem from Abstract