போதும் என்ற மனம்
போதும் என்ற மனம்


உணர்வோ
உணர்ச்சிகளோ
உன்னோடவே இருப்பது
உன்னத மானது ......!!!
கலையாத கனவிலும்
மயங்காத மதியும்
போதும் எனும் மனம் ....!!!
அமைதி இல்லா வாழ்க்கை
மகிழ்ச்சி இல்லா நாட்கள் - இருந்தும்
போதும் எனும் மனம் ....!!!
காதல் இல்லா நெஞ்சம்
நம்பிக்கை இல்லா உறவு - இருந்தும்
போதும் எனும் மனம் ....!!!
புயல் எழுந்தாலும்
எரிமலை வெடித்தாலும் - வேண்டும்
போதும் எனும் மனம் ....!!!
எத்தனையோ உள்ளங்கள்
போதிய உணவின்றி
போதிய உடையின்றி
போதிய இடமின்றி
போதிய நிலையின்றி
வெப்பத்தில் வாடும் மலரை போல்
வாடும் சில மனங்கள் ......!!!
ஏழ்மையின் மனங்கள்
வாடாது இருக்க - அவர்களுக்கும்
கொடுத்து பார்ப்போம்.
போதும் என்றே நினைப்போம்.....!!!
தேவைக்கு அதிகம்
தேவையா ......!!!