Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Deepa Sridharan

Abstract

4  

Deepa Sridharan

Abstract

போர்க்கள தேசமது

போர்க்கள தேசமது

1 min
589


போர்க்கள தேசமது

மலைப் பாம்பொன்று

வயிற்றைத் திருகி

நித்தமும் இரை

தேடிடும் ஆங்கே

வேட்டைக் களமதில்

பாம்பும் இரை

அதைக் கவ்வத்

துடிக்கும் கழுகும் இரை!


மண்ணுக்கும் விண்ணுக்கும்

இடையே ஓராயிரம்

வாள் சண்டை

அக்கினி குழம்புகள்

தெறித்திடும் அம்புகள்

 பெரும்படை விழுங்கும்

ராட்ச்ச பேரலைகள்

ஆம்பல் பிளிறிட

அதிர்ந்திடும் அவனி

சாம்பல் களமதில்

வாழ்வது அவதி


கூடவும் வேட்டை

கூடிப் பெருகவும்

புணர் வேட்டை

தழைக்கவும் வேட்டை

தழைத்துத் திரியவும்

புதிர் வேட்டை

பிடரி தெறித்து

ஓடிடும் புரவி

அதன் குழம்பில்

குருதியின் அருவி


அண்டைவெளிக்குள்

அவகாசம் தேடாமல்

வட்டமிட்டுத் திரியுது

தனிமப் பந்துகள்

காலம் கேட்பதில்லை

அவைகள் வாழ

மூலம் பார்ப்பதில்லை

வெடித்துச் சிதறி

வேறொன்றாய் ஆனாலும்

ஒட்டிக் கிடக்குது

இருட்டில் பதறி    


இத்தனைக்கும் நடுவில்

அமைதியின் விளிம்பில்

ஒய்யாரமாய்

சிலந்தி ஒன்று

சிங்காரமாய்

வலை பின்னுது

நாளை உறங்க

வேண்டும் என்று

போர்க்கள தேசமது!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract