பெண்ணே உனக்காக!
பெண்ணே உனக்காக!
அடுப்படி நிரந்தரமாக
இருக்க வேண்டாமென்று
உலகெல்லாம் பெண்கல்வி
எட்டுதிக்கும் முரசுகொட்ட
ஐயம் திரிபற பயின்று
ஓயாமல் உழைத்து
கண்ணின் மணியாய் வாழ்!
காட்சிப்பொருளாக உடை
கிடைக்கிறதே என உடுத்தாமல்
கீதமாய் நீ இசைக்க
குறை பிறர் சொல்லாதபடி
கூண்டுக்கிளியாய் அடைபடாதிருக்க
கெட்டியாக துணி உடுத்தி
கேலி பேசாதவாறு வாழ்ந்திடுவாய்!
கொடிகள் நிறைந்த சாதி நாட்டினிலே
கோடி கொடுத்தாலும் உனக்கு
கௌரவமான இரண்டாம்இடம்தான்
என்பதை உணர்ந்து வாழ்ந்திடுவாய்!