நூலகம்
நூலகம்
நுழைந்தாலே
கனவு திரைகள்
விழிகளிலே
புகை படங்கள்
யதார்த்த
இனிமைகள்
அசையாது
ஐம் புலன்கள்
உருகிடும்
நெஞ்சங்கள் .....!!!
மனதை கவரும்
செய்திகளும்
தகவல்களும் - மற்றும்
வேற்றுமையில்
ஒற்றுமை காணலாம் .....!!!
தாகத்தின்
ஈர்ப்பின் மைய சக்தி
நேரமும்
விமானம் போல் ஓடும்
தேடலின்
பசியை பிரகாசிக்கும்
நீ மாலை
சூட வேண்டும்
பலரை உருவாக்கிய
பெருமை உனை சேரும்
எழுத்தாளர்
கவிஞர்
தலைவர் .....!!!
அவரவர் கண்ணோட்டம்
போல் தோன்றுகிறாயே எப்படி ?
இளையவனுக்கு - நீ ஒரு
இளைய பெண் போல் தோன்றுகிறாய் ........................!!!
புத்திசாலிக்கு - நீ ஒரு
அறிவு மிகுந்தவன் போல் தோன்றுகிறாய் ........................!!!
முதியவருக்கு - நீ ஒரு
அனுபவம் உள்ளவன் போல் தோன்றுகிறாய் ........................!!!
பொதுவாக - நீ ஒரு
அதிசயத்தில் பெரிய அதிசயமாய் தோன்றுகிறாய் ........................!!!