நட்பு
நட்பு
என்னவென்று புரியாத நாட்களில்,
என்னை தீண்டியது உந்தன் நட்பு,
அதன் ஆழத்தை ஒரு போதும் சந்தேகித்தது இல்லை,
அதன் தூரத்தை ஒரு போதும் நினைத்தது இல்லை,
அதன் நிலையை ஒரு போதும் யோசித்தது இல்லை,
அதனாலேயே அழகிய இனிமையான நினைவுகள் உருவானது,
இன்றும் மாறாமல் பசுமையாக இருக்கிறது,
நம் பால்ய நட்பு.....
