STORYMIRROR

Siva Kamal

Abstract

4  

Siva Kamal

Abstract

நகம்

நகம்

1 min
319

நகம் வெட்டிக் கொள்வது

எனக்கு மிகவும்

பிடித்தமான செயல்


யாரோ ஒருவர்

என் கைகளைத்

தன் தொடை மேல்

வைத்துக் கொண்டு


என் நகத்தைத் கவனமாகத் துண்டிக்கும் போது

அந்த நகம் உடையும் ஓசையில்

பிரியத்தின் சங்கீதங்கள் கேட்பது

எனக்கு மட்டும்தானா ?


அந்த நகங்களால்

பிரியத்தின் மென் இதழ்களை

சற்றே கிள்ளிப் பார்த்திருக்கிறேன்.


என்னால்

பிறருக்குக் கீறல்கள் ஏற்படும்

காலங்களில் எல்லாம்

எனக்கு நகம் வெட்டிவிடும் ஒருவரைத் தேடி

நான் தாமதிக்காமல் கிளம்பி விடுகிறேன்.


நான் நகம் வெட்டிக்கொள்ளும்

ஒவ்வொருமுறையும்

என் உடல் எடை

கணிசமாக குறைந்து விடுகிறது.


ଏହି ବିଷୟବସ୍ତୁକୁ ମୂଲ୍ୟାଙ୍କନ କରନ୍ତୁ
ଲଗ୍ ଇନ୍

Similar tamil poem from Abstract