STORYMIRROR

Shakthi Shri K B

Drama Classics Inspirational

4  

Shakthi Shri K B

Drama Classics Inspirational

நேர்மையின் விளைச்சல்

நேர்மையின் விளைச்சல்

1 min
272

தனி ஒருவனாக பிறந்தேன் என் பெற்றோருக்கு,

அனைத்து நல்குணங்களும் கற்று கொடுத்தனர் என்னக்கு,

பள்ளி படிப்பை முடித்த என்னக்கு என் தந்தையின் வயலில் வேலை.


தினமும் என் பணிகளை முடித்து அனைத்து வேலையும் முடித்து,

அந்த ஒற்றை ஆலமரத்தில் கிழே உறங்கும் சுகம் ஒரு சொர்கம்,

அன்றும் அது போல நான் உறங்க செல்லும் நேரம் கனமழை.


கார்மேகம் சூழ ஓங்கி அறைந்தார் போல பெரு மழை பொழிந்தது,

ஓரமாக இருந்த அந்த குடிசைக்குள் அடைக்கலம் புகுந்தேன்,

இருட்டாக இருந்த அந்த குடிசையில் ஒரு ஒளி என் கண்ணுக்கு தென்பட்டது.


இருளில் மின்னுவது தங்கம் தான் என்பது உறுதியானது,

அதை உற்று பார்த்ததில் தெரிந்தது அது ஒரு தங்க சங்கிலி,

இந்த குடிசையில் வசிக்கும் நபரின் ஒற்றை ஆபரணமாக இருக்க வேண்டும்.


மனதில் பேராசை என்ற பெரு மிருகம் உருவெடுப்பதை உணர்தேன்,

நில் மனமே இது உன்னுடையதில்லை பேராசை ஆபத்து என உறக்க கத்தினேன்,

இந்த நிமிடம் நான் பாதுகாப்பாக இருக்க உதவியது இந்த குடிசை.


இங்கு வசிக்கும் நபர் எந்த சூழலில் வாழ்கின்றாரோர் யாராக இருத்தலும்,

அவர் நல் வாழ்வை எண்ணுகிறேன் மழையும் ஓய்ந்தது,

மெல்ல நகர்ந்தது என் கால்கள் குடிசையை விட்டு மனதில் இருந்த பேராசையையும் விட்டு.


நேரமாய் வாழ்ந்தால் அனைத்து நம்மையும் நம்மை தேடி வரும் என்பார்கள்,

உண்மை தான் என் நேர்மைக்கு பரிசாக இயற்க்கை என் வயலில் தண்ணீரை பாய்ச்சியது,

இந்த முறை விளைச்சலும் அதிகம் மனமும் மகிழ்ந்தது நேர்மையால்.



Rate this content
Log in

Similar tamil poem from Drama