முற்பகல் செய்யின்
முற்பகல் செய்யின்


மகிழுந்துவில் இருந்து
விட்டெறிந்த தகப்பன்
வயிறு நடைபாதையில்
வாடிக் கிடக்க
குளிர்சாதன உணவகத்தில்
நண்பர்களுடன் விருந்து!
நாளை நாமும்
முதியோராவோம்
என்பதை மறந்த
ஈன ஜென்மங்கள்
இருப்பதைவிட
கூற்றுவன் வீடு
செல்வதே மேல்
என நினைத்த
கரோனா உணவகத்தில் உண்ட
அனைவரின் உயிர்
கவர்ந்தாளோ!