மருத்துவக் கனவு
மருத்துவக் கனவு


வெள்ளை உடுப்புடன்
வெள்ளை மனதுடன்
இலவச மருத்துவம்
நினைப்பெல்லாம்
கானல் நீர்தானோ!
மருத்துவரெல்லாம்
கொரானா பயத்தில்
ஒதுங்கியிருக்க
இனி மருத்துவராகும்
கனவுடன் யாரே
வருவார்!!
குடிமக்கள் நலன் காக்கும்
கோவில்கள் இன்னமும்
திறக்காதிருக்கும் போதினில்
மக்களின் குடி கெடுக்கும்
டாஸ்மாக் எதற்காக?
குழப்பத்தில் நீட்
எழுத விரும்பிய மாணவன்
அப்பா அலமாரியில்
வைத்திருந்த டாஸ்மாக்
கண்ணாடி குடுவையில்
சாய்த்த திரவத்தில்
தண்ணீர் குடுவையில்
கலந்து போதையுடன்
நீட் தேர்வைத் தாய்மொழியில்
எழுத தயாராகிக் கொண்டிருக்கிறான்!
உலக நடப்பை
வியந்தபடி பிரம்மன்
வாங்கிய இலஞ்சத்திற்கு
கூற்றுவனிடம் கணக்கு
கேட்டுக் கொண்டிருக்கிறான்!