மகிழ்ச்சி தரும் 🌹 மலர்
மகிழ்ச்சி தரும் 🌹 மலர்


மாந்தர் மனமிழுக்கும் மணம்
வானவில்லை தோற்கடிக்கும் வண்ணம்!!!
காதல் கடிதமாய் மகரந்தம்
கடிதத்தை கொண்டு சேர்க்கும்
தபால்கார தேனீக்கள்
அதற்கு இலஞ்சமாய் தேன்துளிகள்!!!
இதழ்களின் மேல் உள்ள பனித்துளி
அதில் ஊரும் எறும்பு
பாவையர் உதடுபோல்
சுண்டியிழுக்கும் இதழ்கள்!!!
இதழ்களை ஒன்றிணைக்கும் காம்பு
அது செடிக்கும் பூவுக்குமான
காதல் பாலம்!!!
மலரின் அழகை
ரீங்காரத்துடன் ரசிக்கும் வண்டு
வண்ணத்தை கொள்ளயடிக்க வரும்
வண்ணத்துப் பூச்சிக்கள்!!!
ஆஹா எத்துனை உள்ளது உன்னில்
மனத்தை மயங்க வைக்கும் மலரே
உன்னை ரசிப்பதில் தான்
எத்துனை மகிழ்ச்சி 😃