மாய நதி
மாய நதி
வாழ்கை நதி அது ஓடும்,
விரிந்த கடல் போய் சேரும்...
கடக்கும் வழி யாவும்
மாயங்கள் பல தோன்றும்..
பாறை தடையாய் மோதும்
அதன் வலிகள் வழியாய் மாறும்...
கனாக்கள் சுனையாய் ஊரும்...
அதன் நீரால் லட்சிய தாகம் தீரும்...
வெம்மையால் கானலும் தலை தூக்கும்..
வாழ்வை வென்றிடு... கானலதை மனம் மாய்க்கும்...
