கடிஜோக்
கடிஜோக்
1 min
200
கடிக்க ஆளின்றி கடி ஜோக் சொல்லிய
பாலகன் ஒருவன் இணையவலையில்
ஒரு திங்கள் முழுக்க
தவம் செய்தான்!
போட்டிகள் முடிய ஒருநாள் இருக்கையிலே
கொட்டும் மழையில் ஒட்டைக்கூரை வீட்டில்
வைத்திட்ட கணினி நனையாதிருக்கவே
முட்டாள் பாலகன் இணைய வலையைத் தேடினானாம்!
வீட்டுக்கூடத்தில் பெண்களின்
ஆபாச திரைவெளிச்சங்கள் ஒளியில்
அனாதை பிள்ளை இல்லம் தவிர்த்திடவே
சட்டங்கள் இயற்ற நாதியில்லை!
தெருவெங்கும் காந்தியடிகள்
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் முளைத்த
மதுபார்கள்!
இந்தியத்தாய் கடிஜோக்
கேட்டே துயரங்களை விழுங்கி
பெண்குழந்தைகளைத் தாங்கிக்கொண்டிருக்கிறாள்!