கருக்குழந்தை
கருக்குழந்தை
கருப்பையில் மாதம்
பத்தில் நீ சுமக்க
உன்னுள் இருந்த
கருத்துகளே என்
நெஞ்சில் பதிந்து நிற்க
நான் வெளியே
வரத் துடிக்கையிலே
பெண் என்றால்
கள்ளிப்பாலைத் தயார்
செய்யக் காத்திருக்கும்
கூட்டத்தை கல்வித்தடி
கொண்டு அடித்து
விரட்டுவாயோ!
கருப்பை வாசலில்
உதயமாகும் குழந்தைகள்
அனாதை விடுதிகளில்
அடைக்கலமாகாமல் இருக்க
கருப்பை ஒன்றும்
கண்டவனுக்கும் திறக்கும்
சாக்கடை வாசல்
என்றே அம்மா நீயும்
முழங்கிடுவாய்!
ஒருவனுக்கு ஒருத்தியாய்
வாழும் உலகினை
உருவாக்க என் காலத்திலேயாவது
வழி செய்வாயா தாயே!