கனவு
கனவு
ஆற்றங்கரையில்
கூரை வீட்டில்
மெத்தைக் கட்டிலில்
நீ உறங்க...
வீட்டின் வெளியில்
கயிற்றுக் கட்டிலில்
நிம்மதியின்றி நான் இருக்க...
வானம் அழுது
மழையாய் பொழிந்து
என்னை நனைத்தது முழுவதுமாய்...
நான் உள்ளே நுழைய
உன் தூக்கம் கலைய
நான் உன்னை நெருங்க
நீ என்னை அணைக்க
உந்தன் மூச்சு என்னுடன் கலக்க
சட்டென விழித்தால் இவையனைத்தும்
கனவு...

