STORYMIRROR

Manimaran Kathiresan

Classics Children

4  

Manimaran Kathiresan

Classics Children

கல்வி இன்று கடைத் தெருவில்

கல்வி இன்று கடைத் தெருவில்

1 min
207

கல்வி இன்று கடைத்தெருவில்

அரசாங்க பள்ளியோ அர்த்தமில்லாமல் போனது

அவரவர் வருமானத்திற்கு தனிப்பள்ளியும் வந்தது

அந்நிய மொழியில் பள்ளிக்கும் சேர்ந்தது

அவனும் தாய்மொழியை அடியோடவே மறந்தது

பள்ளிப் பாடமும் பயனறியாமல் போனது

பாடத்திற் கெல்லாம் தனிவகுப்பும் வந்தது

பாடம் வளர்க்கும் சுயஎண்ணம் போனது

பாடம் தாய்மொழியில் இல்லாததால் வந்தது

பள்ளிப் பாடமோ சுமைகளாய் ஆனது

பள்ளிக்குச் செல்லும் மனநிலையோ போனது

பகுத்தாயும் கூடங்கள் வாழாமலே வீழ்ந்தது

படிப்பதே மதிப்பெண் பெறுவதென நின்றது

கல்விக ளெல்லாம் காசாகி போனது

கருத்துக்கள் சொல்லவும் விலையுடன் வந்தது

கல்விக் கூடமும் தெருவிற்கே வந்தது

கல்விக்கு மரியாதை இல்லாமலே போனது



Rate this content
Log in

Similar tamil poem from Classics