காதலின் தேடலில் நான்
காதலின் தேடலில் நான்


என் வாழ்வில் நான் தேடும் தேவதையே!
என்னவளே! என் கவியே!!!
எங்கு இருக்கிறாய்?
என்ன செய்கிறாய்?
மீனை தேடிய தூண்டிலாய் நான்!!
காதல் மொழி பேசும் இரு இதயங்களின் உரையாடலின் போது,
கண்களும் காதல் கடிதம் எழுதும்
காதலெனும் விலாசம் தெரிந்தால்..!
என் காதலும்,
அழகிய கவிதை வரிகள் தான்!
அதை ரசித்து படிக்க ரசிகை ஒருத்தி கிடைத்தால், காதலி என்னும் பெயரில்!
கரம் பிடிக்க காத்திருக்கிறேன்,
வரம் கேட்டு வாசலில் நின்று!