Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Tamizh muhil Prakasam

Abstract

4  

Tamizh muhil Prakasam

Abstract

காலக் கட்டாயமான வீட்டுச் சிறை

காலக் கட்டாயமான வீட்டுச் சிறை

1 min
23.9K


மேகம் தொட்டுப் பார்க்க

காற்றை விலக்கியே செல்லும்

சின்னஞ்சிறு புள்ளினமும்

சற்றே அதிசயமாய் தான்

சுற்றி நிகழும் மாறுதல்களையே

பார்த்தே செல்கின்றன !

அதிர்வலை ஏற்படுத்தியே

அச்சமூட்டும் வாகனங்களில்லை !

நச்சுப் புகை கக்கியே

நுரையீரலை பதம் பார்க்கும்

வாகனங்களும் கணிசமாக -

வீட்டுச் சிறைக்குள்

மனிதர்கள் அடைவது

காலத்தின் கட்டாயமாக -

சுதந்திர வானில்

உற்சாகமாக சிறகை விரித்தே

காற்றோடு அளவளாவி

கானம் பாடியே

ஆனந்தமாய் அனுபவிக்கின்றன

சின்னஞ்சிறு புள்ளினங்கள் !



Rate this content
Log in

Similar tamil poem from Abstract