இயற்கை
இயற்கை
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
இயற்கை வரைந்த ஓவியத்தில்
அழகு சேர்க்க
வானமகள்
தனது பங்காக
சூரியனிடம் கடனாக
வானவில் ஆபரணத்தை
மேகக் குழந்தைக்கு
பூட்டி அழகு பார்க்க
மழைத்திருடன்
வேகமாக ஆபரணம்
அழகில் மயங்கி ஒளித்து வைக்க
வானமகளும்
இனி கடன்வாங்கா
வாழ்க்கை தேவையென
உறுதி பூண்டாளே