எந்த பருவமும் (All Seasons)
எந்த பருவமும் (All Seasons)
காலம் காயங்களைப் போக்கும் மருந்து;
பருவமாற்றம் இயற்கையின் ஒரு பாகம்;
காலங்களுக்கு ஏற்ப வாழ்வதும் அவசியமானது;
பருவ நிலை மாற்றத்தை இயற்கை அனுசரிக்கும் ஏற்றுக்கொள்ளும்;
சீற்றங்களையும் அற்புதங்களையும் ஏற்படுத்தும்;
துன்பங்களும் தோல்விகளும் வேதனைகளும் அவானங்களும்
இன்பமும் இனிமையும் வெற்றியும் சாதனையும்
தாங்கிக்கொள்ளும் தகுதி பெற வேண்டும்;
எந்த பருவமும் வசந்தமானதாக அமைவது
நாம் வாழும் வாழ்க்கையிலே!!!
