எங்க ஊரு திருச்சி
எங்க ஊரு திருச்சி


காவேரி பாயும் திருச்சியிலே - சோழர்கள்
வாழ்ந்தனர் சிறச்சியிலே- ஏட்டுக்கும்
பாட்டுக்கும் சிறந்திருக்கும் - இங்கு
மா மலைக்கோட்டை உயர்ந்து நிற்கும்
கரிகாலன் கல்லனை தாங்கி நிற்கும்
நீர்வளம் எப்பொழுதும் பெருகி இருக்கும்
மண்ணைப் பார்த்து ஏமாறாதே- ஒருகாலத்தில்
">கடல்ஆறு ஓடியது இங்கு மறந்துவிடாதே
வெயிலும் மழையும் பனியும் வளியும்
சேர்ந்து அடிக்கும் -இதைப் பார்த்துப்
பார்த்துத் தமிழ் நெஞ்சம் இன்னும் துடிக்கும்
வந்துப் பார்த்தால் ரொம்ப பிடிக்கும்
இக்கவிதையின் தலைப்பு திருச்சி
ஏற்றுக்கொண்டால் மிக்க மகிழ்ச்சி