Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

2 mins
269


இயற்கை இந்த உலகின் சில இடங்களில் பெரு மழையினைப் பொழியும்!

இயற்கை இந்த உலகின் சில இடங்களில் வறட்சியினைக் கொடுக்கும்!

மழை நீர் முறையாகச் சேமிக்கப்பட்டுச் சில இடங்களில் மக்களுக்குப் பயன்படும்!

மழை நீர் முறையாகச் சேமிக்கப் படாமல் சில இடங்களில் கடலில் வீணாகச் சென்று கலக்கும்!

சதுப்புநிலங்களில் உள்ள தண்ணீரால் இயற்கையின் பல உயிரினங்கள் உயிர்வாழ்கின்றன!

நகரமயமாக்கலினால் சதுப்புநிலங்கள் அழிக்கப் பட்டு மனிதர்கள் குடியேறுகின்றனர்!

வேதியியல் பொருள்களாலும், தூசியினாலும், போக்குவரத்தின் மூலம் ஏற்படும் புகையினாலும், தொழிற்சாலைகளாலும் காற்று மண்டலம் மாசடைகிறது!

தொழிற்சாலைகளாலும், வேளான் நிலங்களின் வேதியியல் உரங்களாலும், கால நடைப் பண்ணைகளின் கழிவுகளாலும் நிலவளங்கள் பாதிக்கப் படுகின்றன!

காற்றில் இருக்கும் வேதியியல் மாசுகள் மழை நீரில் கரைந்து நிலவளம் மேலும் மாசடைகிறது!

நில வளத்தில் உள்ள மாசுகள் நீரில் கலப்பதால் நீர்வளங்கள் பாதிக்கப் படுகிறன!

நீர்வளங்கள் பாதிக்கப்படுவதால் நீர் வாழ் உதாரணங்களும் பாதிக்கப் படுகிறன!

அணு மின்சார உற்பத்தி, அணு ஆயுத ஆராய்ச்சிகள், அணு ஆயுத உற்பத்திப் போன்றவற்றின் கழிவுகளால் இந்தப் பூமிக்குக் கதிரியக்கப் பாதிப்பு ஏற்படுகிறது!

தொழிற்சாலை ஒலியினாலும், வாகனங்களின் ஒலியினாலும், வான ஊர்தியின் ஒலியினாலும் ஒலி மாசடைதல் ஏற்படுகிறது!

காடுகள் அழிக்கப் படுவதாலும், வாகனங்களிலிருந்து வெளியேறும் கரியமில வாயுவினாலும் இந்த உலகம் அதிக வெப்பத்தினால் மாசுபடுகிறது!

சுற்றுச் சூழல் மாசடைவதால் மனிதனுக்கு மூச்சு நோய், இதய நோய், தொண்டை எரிச்சல், மூக்கடைப்பு ஆகிய பாதிப்புகளும் ஏற்படுகிறன!

சுற்றுச் சூழல் பாதிக்கப் படுவதால் இயற்கையின் உணவுச் சங்கிலியில் மாற்றம் ஏற்பட்டு இயற்கை வாழ் உயிரினங்கள் பாதிக்கப் படுகின்றன!

மீண்டும் பயன்படுத்துதல் என்னும் தொழில் நுட்பத்தின் மூலம் மாசுகள் பெருமளவிற்குக் கட்டுப் படுத்தப் படுகிறது!

அதிக அளவு மாசிற்குக் காரணமான பொருட்களின் பயன்பாட்டினைக் குறைத்தல் மூலம் மாசு பெருமளவிற்குக் கட்டுப்படுத்தப்படுகிறது!

இயற்கை உரங்களை வேதியியல் உரங்களுக்கு மாற்றாகப் பயன்படுத்துவதன் மூலம் மாசு பெருமளவிற்குக் கட்டுப் படுத்தப் படுகிறது!

மாசற்றப் பொருட்களைக் கண்டுபிடித்து அந்தப் பொருட்களை மாசினை ஏற்படுத்தும் பொருட்களுக்கு மாற்றாகப் பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம் மாசு பெருமளவிற்குக் கட்டுப் படுத்தப் படுகிறது!

உலக அளவில் சுற்றுச் சூழலினைப் பேணிக்காக்க அறிவியல் ஆராய்ச்சிகள் பல செய்து மாசினை ஏற்படுத்தும் பல பொருட்களுக்கு மாற்றான பொருட்களைக் கண்டு பிடித்த சர்வதேச அரசுகள் அந்தப் பொருட்களைச் சட்டம் இயற்றுதல் மூலம் பொது மக்களைப் பயன்படுத்திட வைக்கிறார்கள்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics