Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

சிறந்த மனிதனாக மாறிட நாம் முயற்சி செய்வோம்

சிறந்த மனிதனாக மாறிட நாம் முயற்சி செய்வோம்

1 min
259


நமது சிந்தனைகளில் உள்ள எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்!

நமக்கு மன அழுத்தத்தினைக் கொடுக்கும் செயல்களில் ஈடுபடாமல் தவிர்த்து விடுவோம்!

நேர்மையான வாழ்வியல் முறையினை மட்டுமே நாம் வாழ்ந்து கொண்டு நேர்மையற்ற வாழ்வியல் முறையினைத் தவிர்த்து விடுவோம்!

தீய எண்ணங்களை நமது சிந்தனைகளிலிருந்து முற்றிலும் தவிர்த்து விடுவோம்!

அனைத்து மக்களுடனும் சமமாகப் பழகி நிற வேறுபாடு எண்ணங்களைத் தவிர்த்துவிடுவோம்! 

ஏழைப் பணக்காரன் என்கின்ற எண்ணங்களை மட்டும் மனதில் கொண்டு நண்பர்களுடன் நட்புப் பாராட்டும் பண்புகளைத் தவிர்த்து விடுவோம்! 

நண்பர்களுக்கிடையே நட்புப் பாராட்டும் பொழுதுச் சாதிச் சமய வேறுபாடுகளைத் தவிர்த்து விடுவோம்!

விளிம்பு நிலை மக்களுடன் அன்புடனும் பாசத்துடனும் நட்புடனும் பழகி நமது ஆழ் மனதில் தோன்றும் பாகுபாடு எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்! 

இந்தச் சமூகத்தில் உள்ள ஆணாதிக்க எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்!

காதல் என்னும் எண்ணங்களை இளம் பெண்களின் மனதில் விதைத்து அவர்களை ஏமாற்றும் செயல்களைத் தவிர்த்து விடுவோம்! 

பெண்களை அடிமைப்படுத்தும் எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்! 

பெண்களுக்குத் தேவையான கல்வி, வேலை வாய்ப்பு, சிறந்த மருத்துவ உதவிகளை அளித்துப் பெண்களை வாழ்கையில் உயர வைத்துப் பெண் அடிமை எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்!

இந்தச் சமூகத்தில் உள்ள குழந்தைத் தொழிலாளர் முறையினைத் தவிர்த்து விடுவோம்!

இந்தச் சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கை எண்ணங்களைத் தவிர்த்து விடுவோம்!

நம்மை இழிவு படுத்தும் மக்களிடம் நட்பு பாராட்டாமல் தவிர்த்து விடுவோம்! 

குடும்பத்தில் உள்ள மூத்தோரிடம் ஆலோசனைப் பெற்று வாழ்கையில் தவறான பாதையில் செல்லாமல் தவிர்த்து விடுவோம்!

தற்சார்பு பொருளாதாரத்தினை நமது குடும்பத்தில் செயல்படுத்தி நமக்கு ஒவ்வாத பொருளாதார முறைகளைத் தவிர்த்து விடுவோம்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics