செங்கல்
செங்கல்


ஏய் கல்லே .....
செம்மை நிறத்தவளே
செவ்வகம் வடிவம்
கொண்டவளே ....!!!
எல்லாரும் ....
சுட்ட பின் இறப்பார்கள் !!
நீயோ .....
சுட்ட பின் பிறக்கிறாய் !!
உன்னை ....
ஒன்றின் மேல் ஒன்றாக
கிடைமட்ட வரிசையாக
செங்குத்து வரிசையாக
மண்ணும் சேர்த்து
எழுவதே மாளிகையாம் ...!!!
எதையும் ....
தாங்கும் இதயம்
உன்னிடம் இருக்க - ஏன்
சிமெண்டை மூடி
மறைத்தார்கள் - ஓ
உன் கற்பை
காப்பாற்றத்தானோ ...!!!