அவராக நானிருந்தால்
அவராக நானிருந்தால்
விளைநிலங்க முழுசாக வீட்டுமனைத் தரிசாக
விற்கும் உழவன்கிட்ட
விவசாயம் சொல்லிருப்பேன்
கலப்பை தூக்கிருப்பேன்
காளைகள பூட்டிருப்பேன்
நெலத்தை வணங்கிருப்பேன் நெடுதூரம் உழுதிருப்பேன்
இரசாயன உரமெல்லாம்
நஞ்சாகிப் போகுமுன்னு
இரவோடு இரவாக
இயற்கையுரம் தந்திருப்பேன்
வெளஞ்ச பொருளெல்லாம்
வீதியில கொட்டிவச்சு
சந்தை அமைச்சுருப்பேன்
சாகுறவன தடுத்துருப்பேன்
உழவர்க் கூட்டமொன்னு
உருப்படியா அமச்சுருப்பேன்
உழுத பணத்தையெல்லாம்
சேமிப்பா போட்டுருப்பேன்
உதவி வேணுமுன்னா
உடனே செஞ்சுருப்பேன்
பதவி வேணாமுன்னு
பால்மாட்ட மேய்ச்சிருப்பேன்
பஞ்சம் போக்கிருப்பேன்
பஞ்சகவ்யம் செய்திருப்பேன்
தஞ்சம் அடைந்தோருக்குத்
தயங்காது வழங்கிருப்பேன்
அவராக நானிருந்தால்
அத்துனையும் செய்திருப்பேன் தவறாக எண்ணவேணாம் இப்போதும் செய்திடுவேன்.
( உழத்தி மகன்)