Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Chidambranathan N

Classics Fantasy Inspirational

3  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

அழகிய அணில் பிள்ளை

அழகிய அணில் பிள்ளை

1 min
188


காடுகளில் உள்ள மரக்கிளையில் மகிழ்ச்சியாகத் தாவித்திரியும் அணில் பிள்ளை!

சிறிய பழங்களைச் சேகரித்து ஆனந்தமாக உண்ணும் அணில் பிள்ளை!

சிறிய பழங்களை வாய்க்குள்ளே வைத்துக் கொண்டு அழகாகக் கொக்கரித்துத் தின்னும் அணில் பிள்ளை!

துள்ளித் துள்ளி விளையாடிச் செல்லும் அணில் பிள்ளை!

புதிதாகப் பிறந்த அணில் பிள்ளை குட்டிகளுக்கு உணவினை அன்புடன் ஊட்டிவிடும் அணில் பிள்ளை!

பாடுபட்டுச் சேகரித்த பழங்களைப் பூமியில் புதைத்துவிட்டுக் கால ஓட்டத்தில் மறந்துவிடும் அணில் பிள்ளை!

காடுகளில் உள்ள மண்ணில் அணில்களால் மறைத்து வைக்கப் பட்ட விதைகள் மரங்கள் வளர்வதனைக் கண்டு மகிழ்ச்சியடையும் அணில் பிள்ளை!

பூமியில் புதைத்து வைக்கப் பட்ட சிறிய பழங்கள் செடியாக முளைத்துச் சிறிது சிறிதாக வளர்ந்ததைக் கண்டு ஆனந்தமாகத் தாவிக் குதிக்கும் அணில் பிள்ளை!


Rate this content
Log in

Similar tamil poem from Classics