Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Harini Ganga Ashok

Inspirational

4.3  

Harini Ganga Ashok

Inspirational

சுதந்திரம்

சுதந்திரம்

2 mins
243


விடுதலை அனைவரும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம். பல ஆண்டுகளாக அந்நியர்களிடம் நாம் அடிமையாக காலம் கழித்தோம். இன்று நாம் வாழும் வாழ்க்கை நன்முறையில் இருக்க காரணம் அன்று தன்னுயிரை தியாகம் செய்த வீரர்கள் தான். தர்மத்தை நிலைநாட்ட உயிர் தியாகம் செய்த மாவீரர்கள் போல் சுதந்திர காற்றை சுவாசிக்க எண்ணற்றோர் உயிர் நீத்தனர்.


எண்ணற்ற வீரர்கள் மடிந்து போயினர். பல துயரங்களுக்கு பின்னரே நம்மால் சுதந்திர காற்றை சுவாசிக்க முயன்றது. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்றவாறு தங்களுடைய போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். சிறைவாசம், கொடூர தண்டனைகள், அவமானங்கள் என அவர்கள் அனுபவித்த வலிகள் ஏராளம். அவர்கள் எதிர்க்கும் விதம் முழு தோல்வியை தழுவவில்லை என்றாலும் வெள்ளையனை வெளியேற்றும் முயற்சி வெற்றியும் அடையவில்லை. அதற்கு ஒரு தீர்க்கமான செயலை புரிய முடிவெடுத்தனர்.


ஒரு செயலில் முழுமையாக ஈடுபடும்பொழுது தான் நமக்கு அனுபவமும் முழுவதுமாக கிடைக்கும். சுதந்திர போராட்ட மக்கள் ஒன்றாக இணைந்தால் நம்மை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்துகொண்டனர். அதனை மற்றவர்களுக்கும் அறிவித்தனர். தலைவன் என்பவன் மிகவும் முக்கிய பங்கு வகிப்பவன் ஆகிறான். ஆலோசித்து முடிவெடுக்கும் திட்டங்களுக்கு நிச்சயம் பலன் உண்டு.


திட்டங்களை செயல் படுத்த ஆரம்பித்தனர். வணிகம், வியாபாரம் என்று சொல்லி உள்ளே நுழைந்து நாட்டை ஆக்ரமித்து இருக்கும் அந்நியர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிக்க தயாராகினர். துணிச்சலுடன் களம் இறங்கினர்.


திட்டத்தின் படி திருப்பூர் குமரனை தலைவனாக கொண்ட விடுதலை சிங்கங்கள் மதராஸபட்டினத்தினையும் சுப்ரமணியை பாரதியின் வீரர்கள் வடஇந்தியாவையும் சுபாஷ் சந்திர போஸ் போராட்ட வீரர்கள் கிழக்கிந்தியாவையும் வ. உ. சி யின் தலைமையில் திரண்டிருந்த பாரத மாதாவின் புதல்வர்கள் என ஒரே நேரத்தில் அங்கே உள்ள பிரிட்டிஷ் தலைமையகத்தை சுற்றி வளைத்து நாங்கள் அனைவருமே பாரத மாதாவின் குழந்தைகள் என்பதை நிரூபிக்க அந்நியர்களின் கொடியை களைத்தெறிந்து நம் சுதந்திர கொடியை நாட்டினர்.


நடந்ததை கண்ட ஆங்கிலேயர்கள் இவர்களுக்கு திடீரென்று எப்படி இவ்வளவு தைரியம் வந்தது என்று திகைத்து போயினர். அதனை அதோடு இல்லாமல் அவர்களை வீரமற்றவர்கள் என்று உரைக்க துடித்தனர். நீங்கள் அனைவரும் கோழைகள் அதனால் தான் இந்த நள்ளிரவு வேளையில் இதனை செய்துள்ளிர்கள் என்று கூறினர். அதற்கு நம் வீரர்கள் நாளைய சூரிய உதயத்திற்கு முன் நாங்கள் உங்களை வெளியேற்றி விடுவோம். நாளைய சூரிய ஒளி எங்கள் சுதந்திர கொடியின் மேல் தான் முதலில் படரும் என்று உரக்க கூறினர்.


அவர்களிடம் தெரிந்த உறுதி ஆங்கிலேயர்களிடம் நடுக்கத்தை உருவாக்கியது. சொல்லிய செயலை செய்தும் காட்டினர் நம் வீர சிங்கங்கள். சுதந்திர காற்றை அனைவரும் ஸ்வாசித்தனர். பாரத மாதா அனைவரையும் ஆசிர்வதித்தாள்.


ஒன்றுபட்டு செய்யும் செயல்களுக்கு வலிமை அதிகம். மனதில் உறுதி மற்றும் தன்னம்பிக்கை இருந்தால் அனைத்தும் ஜெயமே!


நாம் அனைவரும் தாயை நேசிப்பதுபோல் நம் தாய்நாட்டை நேசிக்க மட்டுமல்லாமல் காக்கவும் கடமைப்பட்டுள்ளோம்.


பாரத்மாதா கி ஜெய் !!!



Rate this content
Log in

Similar tamil story from Inspirational