டென்ஷன் காதல்
டென்ஷன் காதல்
காலையில் இருந்து வேளையில் ஒரே டென்ஷன். யாரோ பண்ணாத வேளைக்கு மேல் அதிகாரி என்னை வறுத்து கொண்டு இருக்கிறார்.
அவளிடம் இருந்து அழைப்பை பார்த்ததும் எடுத்து ஹலோ என்றேன். "ஹலோ சாப்டியா" என்றாள். இல்லை இனி தான் என்று சொன்னதும் "மணி என்ன ஆகுது" என்று ஆரம்பித்தாள்.
"எனக்கு தெரியும் நான் பாத்துக்கறேன்" என்று கோபமாக துண்டித்துவிட்டேன். அப்புறம் தான் உரைத்தது யாரோ பண்ண தப்புக்கு இவகிட்ட கோபப்பட்டுட்டோமே என்று. 2 நிமிடத்தில் அவளே அழைத்து "சாரி!! டென்ஷன் ஆகாத, எதுனாலும் சாப்பிட்டு வந்து பாரு சரி ஆகிரும்" என்றாள்.
எத்தனை பேருக்கு கிடைத்து விடும் இந்த எதிர்பார்ப்பு இல்லா காதல்!!!இந்த ஒரு ஆறுதல் போதாதா எல்லா பிரச்னையும் சமாளிக்க!!

